fbpx

Drugs | போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வரலட்சுமிக்கு தொடர்பா..? சரத்குமார் பாஜகவில் இணைய இதுதான் காரணமா..?

சமீபத்தில் நடிகர் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்த நிலையில், சரத்குமாரின் மகள் வரலட்சுமி போதை பொருள் விவகாரத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படுவதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு துறைமுகம் ஒன்றில் 300 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஆதி லிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியிடம் மேலாளராக பணி புரிந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் வரலட்சுமிக்கு தொடர்பா? என விசாரணை செய்ய என்.ஐ.ஏ அவருக்கு சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த தகவலை வரலட்சுமி மறுத்துள்ளார்.

எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி தவறானது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இந்த கடத்தல் சம்பவத்திற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஆதிலிங்கம் என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன் என்னிடம் ப்ரீலான்ஸ் மேனேஜராக பணிபுரிந்தார். அதை தவிர அவருக்கும் எனக்கும் வேறு எந்த விதமான தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். பிரபலங்களிடம் டிரைவர், மேனேஜர் போன்ற பணிகளை செய்து வரும் நபர்கள், பிரபலங்களின் பெயரை தவறாக பயன்படுத்தி சமூக விரோத குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், பிரபலங்கள் தங்கள் மேலாளரை பணியில் அமர்த்தும் முன் அவர்கள் குறித்த பின்னணியை விசாரித்து பணியில் அமர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Read More : ADMK-வில் கூண்டோடு ஐக்கியமான திமுக, அமமுக, ஓபிஎஸ் அணியினர்..!! மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் எடப்பாடி..!!

Chella

Next Post

Lok Sabha | இன்று வெளியாகிறது லோக்சபா தேர்தல் தேதி..? நடத்தை விதிகள் உடனே அமல்..!!

Fri Mar 15 , 2024
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் இந்தியா முழுவதும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மாநிலங்கள் வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக இருந்த […]

You May Like