fbpx

உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்..!! வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் போதும்..!!

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள நினைப்பார்கள். எவ்வளவு தான் நீங்கள் முயற்சி செய்தாலும், உங்களால் உடலை சீராக வைத்துக்கொள்ள முடியவில்லையா? அதற்கு எல்லாம் தீர்வு தரும் வகையில் இருப்பது தான் முருங்கைக் காய். முருங்கை இலைகள், விதைகள், பூக்கள், பட்டை, வேர்கள் என அனைத்தும் மனிதனின் உடலுக்கு நன்மையை தருகிறது. அந்தவகையில், நீங்கள் உடல் எடையை உடனே குறைக்க விரும்பினால், இந்த முருங்கைக்காய் சூப் செய்து குடித்துப் பாருங்கள்.

தேவையான பொருள்:

முருங்கைக்காய் – 100 கிராம்

தக்காளி – 50 கிராம்

பருப்பு – 30 கிராம்

பெருங்காயம் – 1 சிட்டிகை

சீரகம் – 1/4 டீஸ்பூன்

கிராம்பு – 1

பிரிஞ்சி இலை – 1

கருப்பு மிளகு – 1 சிட்டிகை

கொத்தமல்லி தூள் – 1/4 டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

இஞ்சி – அரை அங்குலம்

மஞ்சள் – அரை அங்குலம்

கல் உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

* துவரம்பருப்பு, தோல் நீக்கிய முருங்கைக்காய் மற்றும் தக்காளியை குக்கரில் சேர்த்து, அதற்கு தேவையான தண்ணீரை ஊற்றி 4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்து எடுத்தவுடன் அதை மசித்துக் கொள்ளவும்.

* அடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மஞ்சள், இஞ்சி, பிரிஞ்சி இலை, கிராம்பு, பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து கிளறி வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு மசித்து வைத்துள்ளதை தாளித்த பொருட்களுடன் கலந்து, அதில் கொத்தமல்லி, உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கிளறவும்.

* இவ்வாறு செய்து எடுத்தால் சுவையான உடல் எடையை குறைக்கும் முருங்கைக்காய் சூப் ரெடி.

Read More : இனி வீடு வாங்கவே முடியாது போலயே..!! அதிரடியாக உயர்ந்த விலை..!! எவ்வளவு தெரியுமா..?

English Summary

If you want to lose weight immediately, try drinking this drumstick soup.

Chella

Next Post

ரேஷன் பொருட்கள் விற்பனையில் வரப்போகும் புதிய நடைமுறை..!! பொதுமக்கள் செம ஹேப்பி..!!

Wed Aug 28 , 2024
The practice of distribution of goods through packets has been introduced in ration shops.

You May Like