fbpx

Weather Update: மக்களே உஷார்…! இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை…!

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது; தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக் கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

English Summary : Dry weather from today till 5th March

Vignesh

Next Post

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உடனடியாக கட்டுப்படுத்தும் சித்த வைத்திய மருந்து.!?

Thu Feb 29 , 2024
தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இந்த சர்க்கரை நோய் உணவு பழக்கங்களினாலும், பரம்பரையின் ஜீன்காரணமாகவும் நம் உடலில் ஏற்படுகிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகளின் மூலம் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கு பதிலாக நம் உணவில் ஒரு சில […]

You May Like