fbpx

வரும் 2-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்…! சென்னை வானிலை மையம் தகவல்…!

நாளை முதல் வரும் 2-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 2-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

#Breaking..!! பிரதமர் மோடியின் தாயார் காலமானார்..!! அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்..!!

Fri Dec 30 , 2022
இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 100. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடி தனது  ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில்  “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் […]
#Breaking..!! பிரதமர் மோடியின் தாயார் காலமானார்..!! அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல்..!!

You May Like