fbpx

#சற்று முன்..!! ஜாமீனில் வெளியே வருகிறார் டிடிஎஃப் வாசன்..!! அனுமதி கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், அவரது வலது கை முறிந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் டி.டி.எப் வாசன் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, டிடிஎப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், டிடிஎப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 3 வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

'ஆமா இது ஆபாசப் படம் தான்’..!! ’தமன்னா மட்டும் ஒழுங்கா நடிச்சிட்டாங்களா’..? வறுத்தெடுத்த கே.ராஜன்..!!

Wed Nov 1 , 2023
ராரா சரசுக்கு ராரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், “இப்படி ஒரு பட நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு விட்டார்களே என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். காரணம் ட்ரெய்லர் அப்படி இருந்தது. இது ஆபாசப்படம். அதற்குத்தான் ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதை ரசிக்க ஆள் இருக்கிறார்களா என்றால் இருக்கிறது. இதற்கென்று ஒரு கூட்டமே இருக்கிறது. அண்மையில் 700 கோடிக்கு […]

You May Like