fbpx

டிடிஎஃப் வாசனின் பைக் எரிக்கப்படுகிறது? யூடியூப் சேனல் முடக்கப்படுகிறது? சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

சாலைகளில் பைக்கில் சாகசம் புரிந்து வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றிருப்பவர் டிடிஎப் வாசன். இவர் தனது பைக் சாகசத்தால் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். மேலும், போலீசாரும் அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கினார்.

பின்னர், செப்டம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு டி.டி.எப்.வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சாலையில் மிதமான வேகத்தில் வந்த நிலையில், கால்நடைகள் சாலையை கடந்ததால் திடீரென பிரேக் போட்டதால், வாகனத்தின் சக்கரம் தூக்கியதாகவும், பிரேக் போடாமல் இருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை எனவும், புண்கள் மோசமாகி வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தான் அப்பாவி என்றும், எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில், யூடியூபில் 45 லட்சம் லட்சம் பேர் மனுதாரரை பின் தொடர்கிறார்கள். 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்ததால் அவர் இந்த விபத்தில் உயிர் தப்பி இருக்கலாம். ஆனால், இதைப் பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் 2 லட்சம் விலையுள்ள பைக்கை வாங்கி கேட்டு, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். சிலர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும். அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, யூடியூப் தளத்தை மூடிவிட்டு பைக்கை எரித்து விடும்படி கருத்து தெரிவித்தார்.

Chella

Next Post

ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் இந்தியாவுக்கு தங்கம்..!

Thu Oct 5 , 2023
19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நடைபெற்று வருகிறது. இதில் பல பிரிவுகளில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்கள், பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தற்போது ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசிய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அணி தங்கம் வென்றுள்ளது. தீபிகா பள்ளிக்கள் மற்றும் ஹினம்தேர்பால் சிங் ஆகியோரின் முயற்சியால் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க […]

You May Like