தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் இடையே நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. பாஜக கூட்டணியை பொறுத்தமட்டில் அந்த கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பாமக 10 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.
இதுதவிர ஓபிஎஸ் அணிக்கு ராமநாதபுரம், பாரிவேந்தரின் ஐஜேகே கட்சிக்கு பெரம்பலூர், தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு சிவகங்கை, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தென்காசி, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பாஜக கூட்டணி சார்பில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு தேனி மற்றும் திருச்சி லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தனது விருப்பத்தின்படியே டிடிவி தினகரன், தேனியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.
Read More : Ration | தமிழக ரேஷன் கடைகளில் UPI பரிவர்த்தனை இருக்கா..? இல்லையா..? குழப்பத்தில் பொதுமக்கள்..!!