fbpx

கனமழை… இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று விடுமுறை… அரசு அறிவிப்பு…!

கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டலச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழையும் பெய்யும். நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் நலன் கருதி இன்று 2 நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கபட்டுள்ளது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது; நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

GST: இவர்களுக்கும் கட்டாயம்... வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு புதிய மாற்றங்கள்...! முழு விவரம் இதோ...

Wed Aug 3 , 2022
அக்டோபர் முதல் ஜிஎஸ்டி விதிகளில் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, ரூ.10 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட வணிகங்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் B2B( Business-to-business) பரிவர்த்தனைகளுக்கான மின்னணு விலைப்பட்டியல் உருவாக்க வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் வாரியம் (CBDT) மற்றும் சுங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 20 முதல் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வரி செலுத்துவோருக்கு கடந்த மார்ச் […]

You May Like