fbpx

கனமழை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கால்லூரிகளுக்கு நாளை விடுமுறை…!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று தொடங்கிய கனமழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது.

மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில்காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 16-ம் தேதி நிலவக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக நாளை (15.11.2023) சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கிப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் நாளைய தினம் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளநிலையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்டுகிறது. இருப்பினும், தற்போது வரை எந்த ஒரு ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

கனமழை முன்னெச்சரிக்கை!… அமைச்சர்கள், கலெக்டர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு!

Wed Nov 15 , 2023
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. போதிய நீர்வரத்து இல்லாததாலும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையிலும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர், […]

You May Like