தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இந்த கன்மலை காரணமாக, மாணவர்களின் நலனைக் கருதி இன்றைய தினம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றைய தினம் காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக நேற்றைய தினமும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதே போல் இன்றும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.