fbpx

#mandous: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…? முழு பட்டியல்…

கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 4 மணி அளவில் புயல் கரை கடந்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி,விழுப்புரம், காஞ்சிபுரம், திருவாரூர், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சிறுவாலை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கல் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

#சற்று முன்: மாண்டஸ் புயல் கரையை கடந்தது..‌.! இருந்தாலும் கனமழை தொடரும்...!

Sat Dec 10 , 2022
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மாண்டஸ் புயல், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலைவில் மையம் கொண்டது. மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருந்தது. இந்தப் புயல் ஆனது அதிகாலை 4 மணி அளவில் மாமல்லபுரம் […]

You May Like