fbpx

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பெற்றோர் கண்டிப்பு..! மனமுடைந்த மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை..!

ஈரோடு அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்தது குறித்து பெற்றோர் கண்டித்ததால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 10ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கல்லுக்கடைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பசீர் அகமது. இவர் கூலித்தொழில் செய்து வரும் நிலையில், இவரது மகளான 10ஆம் வகுப்பு பள்ளி மாணவி அருகில் உள்ள மெட்ரிக் பள்ளியில் படித்து வந்துள்ளார். மாணவி, கடந்த காலாண்டு தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருந்ததால், பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படிக்கவரவில்லையென மன உளைச்சலில் இருந்த பள்ளி மாணவி, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் எலி மருந்து எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பெற்றோர் கண்டிப்பு..! மனமுடைந்த மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை..!

இது தொடர்பாக கடந்த 1ஆம் தேதி அடிக்கடி வாந்தி எடுக்கவே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். பெற்றோர் திட்டியதாக பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் பெற்றோர்கள் முன்னிலையில் சிறுமிகளை திட்டுவதை குறித்து அறிவுரை வழங்கினர்.

Chella

Next Post

வசதி படைத்த நபர்களும் முக்கிய பிரமுகர்களும் ரேஷனில் பொருட்கள் வாங்குகிறார்களா? அறிக்கை தர உணவுத்துறை உத்தரவு..!

Thu Aug 4 , 2022
வசதி படைத்த நபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குகிறார்களா என்று விசாரணை செய்து பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நியாய விலைக் கடைகள் சரியாக செயல்படவும், உணவு பற்றாக்குறைகளை கலையவும் சரியான அடிப்படை தேவையுள்ள பொதுமக்கள் விரைவில் பயன்பெறவும் அதுகுறித்து ஆலோசிக்க உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் […]

You May Like