fbpx

உலகின் 8-வது கண்டம் கண்டுபிடிப்பு..!! புதிதாய் உருவான ப்ரோட்டோ மைக்ரோ கண்டம்! – விஞ்ஞானிகள் தகவல்..

டெக்டோனிக் பரிணாம வளர்ச்சியின் காரணமாக டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்ற புதிய கண்டம் உருவாகியுள்ளது.

மேற்கு கிரீன்லாந்து பகுதியில் உள்ள ஜலசந்தியின் டெக்டோனிக், பரிணாம வளர்ச்சியின் காரணமாக நிலபரப்பாக உருவாகியிருக்கிறது. இந்த புதிய கண்டத்திற்கு டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிய கண்டம் உருவானது எப்படி? தெரிந்துக் கொள்வோம். டேவிஸ் ஜலசந்தி ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம், புதிய கண்டமாக இருந்தாலும், இது அளவில் மிகவும் சிறியது. எனவே, இதனை ப்ரோட்டோ-மைக்ரோ கண்டம் என்று வகைப்படுத்தியுள்ளனர்.

பூமியின் மேல்தட்டுகளின் இயக்கம் இயற்கை நிகழ்வுகளால் ஏற்படுகின்றன. கனடா மற்றும் கிரீன்லாந்து இடையே உள்ள பூமியின் மேல்தட்டு, டேவிஸ் ஜலசந்தியை உருவாக்குகிறது. இந்த ஜலசந்தியின் டெக்டோனிக் பரிணாமம் 33-61 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பேலியோஜீன் காலத்தில் இருந்தது. இதன் விளைவாக ஒரு அசாதாரண நிலபரப்பு உருவானது என்று கூறப்படுகிறது. இந்த பரிணாம வளர்ச்சியின் காரணமாக கடலில் கான்டினென்டல் மேலோடு, இயல்பை விட தடிமனானதாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த ப்ரோட்டோ-மைக்ரோ கண்டத்தின் உருவாக்கம், முக்கியமாக 49-58 மில்லியன் காலகட்டத்துடன் இணைக்கப்பட்டது. கனடாவிற்கும் கிரீன்லாந்திற்கும் இடையில் பரவியிருக்கும் கடற்பரப்பின் நோக்குநிலை மாற்றப்பட்டு, டேவிஸ் ஜலசந்தியின் ப்ரோட்டோ-மைக்ரோ கண்டத்தில் இருந்து பிளவுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Read more | சாட்டை துரைமுருகன் வழக்கு… கருணாநிதி பேசியதை அம்பலப்படுத்திய அண்ணாமலை…!

English Summary

Scientists Discover New Microcontinent Between Canada and Greenland

Next Post

சற்றுமுன்...!போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின்..! ஆனால் மேலும் ஒரு சிக்கல்

Fri Jul 12 , 2024
Jaber Sadiq granted bail in drug case

You May Like