fbpx

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால்; சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை…!

கோவையில் பாஜகவினரின்வீடுகளில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் ரயில்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் கடந்த மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் 9 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

கோவை வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அங்கிருக்கும் காவல்துறையினர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை செய்தனர்.

Rupa

Next Post

இந்த ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. தமிழக அரசு சொன்ன நற்செய்தி..

Sat Sep 24 , 2022
மின்வாரிய ஊழியர்களின் அகவிலைப்படி 3% உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது, மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 3 சதவிகிதமாக உயர்ந்து 34 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.. […]

You May Like