fbpx

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பால், நீர்திறப்பும் அதிகரிப்பு..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரியாற்றில் அதிக அளவு நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு உயர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.06 அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு 93.56 டி.எம்.சியாகவும் இருந்தது. அணைக்கான நீர்வரத்து 1,20,000 கனஅடியில் இருந்து 1,21,000 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பால், நீர்திறப்பும் அதிகரிப்பு..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

இதனால், மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மூலம் 23,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், 16 கண் பாலம் வழியாக 1,07,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படும் நிலையில், கரையோரம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120.060 அடியாகவும், நீர் இருப்பு 93.566 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1,30,000 கனஅடியாக உள்ளதால், அணையில் இருந்து 1,30,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Chella

Next Post

தமிழக அரசின் மின் துறையில் வேலைவாய்ப்பு 10-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்...!

Mon Aug 8 , 2022
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Electrician பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் […]

You May Like