இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தால் அவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் படகுகளை இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. அதில் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில், இந்திய எல்லையைத் தாண்டிஇலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வருவது அதிகரித்து வருகின்றது. சட்ட விரோதமாக மீன்பிடிப்பது தொடர்ந்து வரும் பட்சத்தில் மீனவர்களின் படகுகளை பரிமுதல் செய்து வருகின்றோம். இனியும் அது தொடர்ந்தால் பறிமுதல் செய்யப்படும் படகுகளை இலங்கை மீனவர்களிடம் வழங்கப்படும். என்றார்.
2018 –ம் ஆண்டு முதல் இலங்கைபடையினர் இதுவரை 80க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பறிமுதல் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த உரை தமிழக மீனவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி அந்நாட்டு காவல்துறையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதும் , அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. எனவே பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்று மீனவர்கள் ஒரு புறம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.