“மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்” என துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் தலைமைக் கழகச் செயலாளர் ஆன பிறகு, அதை சகித்துக் கொள்ள முடியாமல் 4 ஆண்டுகளாக, கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர்” என்று தொடர்ந்து பணியாற்ற என் மனம் விரும்பவில்லை.
இதனால், முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறவுள்ள நிர்வாக குழு கூட்டத்தில் நான் நிச்சயம் பங்கேற்பேன். அதன் பிறகு மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்பதால் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.
மதிமுக முதன்மைச் செயலாளர்
— Durai Vaiko (@duraivaikooffl) April 19, 2025
பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
——————————————-
அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல்… pic.twitter.com/PVHVqChFVw
அதேசமயம், மதிமுக தொண்டனாக இருந்து கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். திருச்சி தொகுதி மக்கள் என்னை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கடமையாற்றுவேன். எப்போதும் போல தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தோழனாக இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.