fbpx

நிர்வாகிகளை கெட்ட வார்த்தையால் திட்டி அடிக்க பாய்ந்த சாட்டை துரைமுருகன்..!! சீமான் சொன்ன பதிலை கவனிச்சீங்களா..?

நெல்லையில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பங்கேற்க வந்த நிர்வாகிகள், தொண்டர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வாங்கி வைக்கப்பட்டது. இது நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த கூட்டத்தில் சீமான், வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பேசினார். கட்சியின் நிர்வாகிகள் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன் எழுந்து பேச முயற்சித்தார். அப்போது, ‘இது என் கட்சி, இங்கு நான் மட்டும்தான் பேசுவேன்’ எனக்கூறிய சீமான் அவரை நோக்கி, ‘நீ யார், சாதிய அடிப்படையில் செயல்படுகிறாய், வெளியே போ’ என அவரை ஒருமையில் திட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், ‘பார்வீன் கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் நல்லமுறையில் கட்சி பணியாற்றிவர். யாரோ ஒருவர் கூறியதை வைத்து அவரை திட்டுவது சரியல்ல. சாட்டை துரைமுருகன் கூட சாதிய ரீதியில் பேசி வருகிறார். அவரை நீங்கள் கண்டிக்கவில்லை’ எனக் கூறியதை தொடர்ந்து, அந்தோணி விஜயையும் நீயும், வெளியோ போ என சீமான் ஒருமையில் திட்டியிருக்கிறார்.

மேலும், சாட்டை துரைமுருகன் கெட்ட வார்த்தையால் திட்டி அவரை அடிக்க பாய்ந்ததால் கூட்டத்தில் சலசலப்பு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், கூட்டத்தை விட்டு மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், அம்பை தொகுதி பொறுப்பாளர் சார்லஸ், ராதாபுரம் தொகுதி துணைத் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பாதியில் வெளியேறினர். தொடர்ந்து, நெல்லை ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த மோதல் பற்றி கேட்டபோது, ”கட்சியின் தலைவர் என்பவர் அன்பான சர்வாதிகாரியாக இருந்தால் மட்டுமே கட்சியை வழி நடத்த முடியும்” என்று தெரிவித்தார்.

Read More : பிரபல வங்கியில் கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! மாதம் ரூ.31,000 சம்பளம்..!! டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

English Summary

It is not right to scold someone for what he said. Even the whip Duraimurugan has been speaking in terms of caste.

Chella

Next Post

கிண்டி மருத்துவமனையில் மீண்டும் சர்ச்சை..!! மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் உயிரிழப்பு..!! உறவினர்கள் போராட்டம்..!!

Fri Nov 15 , 2024
The youth who was admitted to the Chennai Guindi Hospital for treatment has died and his relatives have accused him of the lack of doctors and argued that the young man died.

You May Like