புளோரிடா ஆர்லாண்டோவை சேர்ந்த பெண்ணின் செல்லப்பிராணியான பேர்ல்(முத்து) உலகின் மிகவும் குள்ளமான நாய் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
உலக கின்னஸ் ரெக்கார்ட் வெளியிட்ட தகவலின் படி, இதற்கு முன்பு உலகின் மிகச்சிறிய நாயாக அங்கீகரிக்கப்பட்ட மிராக்கிள் மில்லியின் வம்சாவழியில் வந்த பெண் நாய் தான் பேர்ல் என்று முத்து. மிராக்கிள் மில்லி தான் முன்பு இந்த பட்டத்தை வைத்திருந்தது. மிராக்கிள் மில்லி, 1-பவுண்டு எடை உடையது. சிவாவாவுல் 2011 இல் பிறந்து. 2020 இல் இறக்கும் வரை 9.65 சென்டிமீட்டர் அல்லது 3.8 அங்குல உயரமே வளர்ந்து இருந்தது. இதுதான் உலகின் மிக குள்ளமான நாயாக இருந்தது.
இந்தநிலையில் தற்போது புளோரிடா ஆர்லாண்டோவை சேர்ந்த பெண்ணின் செல்லப்பிராணியான பேர்ல்(முத்து) உலகின் மிகவும் குள்ளமான நாய் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. செப்டம்பர் 1, 2020 இல் பிறந்த முத்து, 9.14 செமீ (3.59 அங்குலம்) உயரமும் 12.7 செமீ (5.0 அங்குலம்) நீளமும் உடையது. குறிப்பாக முத்து பாப்சிகிளை விட சிறியது, டிவி ரிமோட்டை விட சிறியதாகும். இந்த நாய் கிட்டத்தட்ட டாலர் நோட்டின் நீளம் தான் இருக்கிறது.
முத்துவை (பெர்ல்) சமீபத்தில் அதன் உரிமையாளர் வனேசா செம்லரால் இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான Lo Show Dei Record இல் அறிமுகப்படுத்தினார். இதை பார்த்ததுமே பார்வையாளர்கள் மிகப்பெரிய அளவில் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.. நாயின் உரிமையாளர் செம்லர், அந்த நிகழ்ச்சியல் கூறும் போது, எங்கள் நாயான பெர்ல் அமைதியான குணம் கொண்டவள், ஒரு பெரிய நேரலையில் பார்வையாளர்களுக்கு முன்னால் மேடையில் இருந்ததற்காக தயங்கவில்லை . எங்கள் நாய்க்கு சிக்கன் மற்றும் சால்மன் போன்ற உயர்தர உணவை சாப்பிடுவது மிகவும் விருப்பமான ஒன்று என்றும் கூறினார். ஆடை அணிவதை விரும்புகிறது.
பெர்லின் (முத்து) உயரம் அது பிறந்த ஆர்லாண்டோவில் உள்ள கிரிஸ்டல் க்ரீக் விலங்கு மருத்துவமனையில் வெவ்வேறு இடைவெளிகளில் மூன்று முறை அளவிடப்பட்டது . ஒவ்வொரு அளவீடும் அவளது முன் கால் பாதத்தின் அடிப்பகுதியில் இருந்து வாடியின் மேல் வரை நேர் செங்குத்து கோட்டில் எடுக்கப்பட்டது. ‘அவளைப் (முத்துவவை) பெற்றதற்கு நாங்கள் பாக்கியவான்கள். எங்கள் சொந்த சாதனையை முறியடிப்பதற்கும், இந்த அற்புதமான செய்தியை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த தனித்துவமான வாய்ப்பை பயன்படுத்தி உள்ளோம்” இவ்வாறு செம்லர் கின்னஸ வெர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பிடம் கூறினார்.