fbpx

குட் நியூஸ்…! மின் வடிவில் இ-சாதிச்சான்றிதழ்‌…! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…! இவர்களுக்கு மட்டுமே…!

தமிழக அரசால்‌ நரிக்குறவர்‌, குருவிக்கான்‌ சமுதாயத்தினர்‌ அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும்‌ நலத்திட்டங்களை பெற தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பழங்குடியினர்‌ மக்களுக்கு சாதிச்சான்றிதழ்‌ வழங்க அதிகாரம்‌ வழங்கப்பட்டுள்ள வருவாய்‌ கோட்டாட்சியர்கள்‌ / சார்‌ ஆட்சியர்கள்‌, நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாய மக்களுக்கு பழங்குடியினர்‌ சாதிச்சான்று வழங்குவதற்கு எதுவாகவழிகாட்டி நெறிமுறைகள்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌ தற்போது மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ பிரிவில்‌ இருந்து பழங்குடியினர்‌ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளநரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாய மக்களுக்கு பழங்குடியினர்‌ சாதிச்சான்றிதழை அரசால்‌ வெளியிடப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, ஏற்கனவே மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ சாதிச்சான்றிதழ்‌ மின்‌ வடிவிலான முறையில்‌ பெற்றுள்ள நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாய மக்களுக்கு புதிய மின்‌ வடிவிலான சாதிச்சான்றிதழ்‌ வழங்குவதற்கு நடவடிக்கை விரைந்து எடுக்க அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்‌ அட்டை வடிவிலான மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ சாதிச்சான்று வைத்துள்ளவர்களின்‌ சாதிச்சான்றிதழை ரத்து செய்து பழங்குடியினர்‌ சாதிச்சான்றுகள்‌ வழங்குவது தொடர்பாக, புதிய இணைய தொகுப்பு உருவாக்கப்பட்ட நிலையில்‌ கீழ்க்கண்டவாறு நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாயத்திற்கு பழங்குடியினர்‌ சாதிச்சான்றுகள்‌ வழங்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நரிக்குறவள்‌, குருவிக்கான்‌ சமுதாயத்தினர்‌ மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ வகுப்பிலிருந்து பழங்குடியினர்‌ சமுதாயத்திற்கு மாற்றப்படுவதாக மத்திய அரசால்‌ அரசிதழ்‌ வெளியிடப்பட்ட நாளிலிருந்து அதாவது 03.01.2023-ஆம்‌ நாளிலிருந்து நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாயத்தினர்‌ பழங்குடியினர்‌ சாதிச்சான்றிதழ்‌ பெறுவதற்கு தகுதி பெறுவார்‌.

எனவே புதியதாக குருவிக்காரன்‌, நரிக்குறவன்‌ சான்று பெற தகுதியான நபர்கள்‌ ஆதார் ஆவணங்களுடன்‌ இணைய தளத்தில்‌ விண்ணப்பித்து பயன்‌ பெறுமாறும்‌, ஏற்கனவே மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ சாதிச்சான்று அட்டை வடிவில்‌ வைத்துள்ளோர்கள்‌ வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைத்து இ-சான்றிதழ்‌ பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Vignesh

Next Post

நோ லீவ்...!சென்னையில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்...! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Tue Jun 20 , 2023
சென்னையில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த காரணத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிட்டனர். மழையின் அளவு குறைவானதால் இன்று சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் […]

You May Like