சுங்கக்கடடணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எ.வ.வேலு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டனர். அப்போது, தமிழ்நாட்டில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள, சென்னை துறைமுகம் – மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட மேம்பால சாலைக்கு, பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். நெடுஞ்சாலைத்துறை, சுமார் 64,000 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை பராமரித்து வருகிறது என்றார் .
தமிழ்நாட்டில் சாலை வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டம் மற்றும் தாலுக்காவை இணைக்கும் முக்கியமான மாநில நெடுஞ்சாலைகளை 2026ஆம் ஆண்டிற்குள் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் போக்குவரத்து செறிவின் அடிப்படையில், சுமார் 2,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலையாகவும் மற்றும் 6,700 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 2 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்தப்படும் எனவும், தமிழ்நாட்டில், தற்போதுள்ள 1,280 தரைப்பாலங்களும், 2026 ஆம் ஆண்டிற்குள், உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படும் என்றும், போக்குவரத்து நெரிசலை குறைக்க, நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் பிற மாவட்டச் சாலைகளில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங்குகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் சாலை மேம்பாலமாக மாற்றப்படுகின்றன. தமிழ்நாட்டின், 10,000 கிலோ மீட்டர் பஞ்சாயத்துச் சாலைகள் மற்றும் பஞ்சாயத்து யூனியன் சாலைகள், ஐந்து ஆண்டுகளில், பிற மாவட்டச்சாலை தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.