திருப்பூர் அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் இயங்கி வந்த ஒரு தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்திற்கு உடனடியாக தகவலின் பேரில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 தண்ணீர் லாரி உதவியுடன் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
திருப்பூரில் கடந்த இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை ஏற்பட்டது. இதனால் சில இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, இன்று அதிகாலை மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்ட போது ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே தனியார் பனியன் கம்பெனியில் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பனியன் தயாரிப்பு, பேப்ரிகேஷன் மற்றும் பேக்கிங் உள்ளிட்ட பணிகள் அங்கு நடைபெற்று வந்துள்ளதாகவும் தெரியவந்தது.
Read More: நீண்ட காலத்திற்குப் பிறகு கோவையில் கனமழை…! தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்…!