Train Accident: ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது ஒருவர் உயிரிழப்பு, 60 பேர் காயமடைந்தனர்.
ஜார்கண்ட் மாநிலம் சக்ரதர்பூர் அருகே ஹவுரா-சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை ராஜ்கர்சவான் மற்றும் படபாம்போ நிலையங்களுக்கு இடையே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 18 பெட்டிகள் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு குழுவினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில் தடம் புரண்டது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.