உலகம் தோன்றிய காலம் முதல் வெவ்வேறு காரணங்களால் லட்சக்கணக்கான உயிர்கள் இறந்து மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இயற்கையாகவோ, செயற்கையாகவோ நடக்கும் நிகழ்வுகள் மூலம் உலகில் மக்கள் தொகை திடீரென அதிகளவு எண்ணிக்கையில் குறையும். அப்படி ஒன்றாகவே, கொரோனா அமைந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல லட்ச உயிர்கள் இறந்தன.
இந்நிலையில் தான், உலகம் எப்போது அழியும் என்பது குறித்த புதிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்பு டைனோசர்கள், ஆதி மனிதன் வசித்த காலங்கள் முடிவுக்கு வந்து இன்றைக்கு நாகரீக உச்சதில் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பொருளுக்கும் அழிவு இருப்பதை போன்று உலகிற்கும் அழிவு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
சுனாமி, கடல் சீற்றம், விண்கற்கள் மோதுவது போன்ற செயல்பாடுகளால் உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், புவி வெப்பமயமாதல் என்பது மிகவும் அதிகரித்து வரும் ஆபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிரபல இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் உலகம் அழிவது குறித்து தனது கவலையை கூறியிருந்தார். இது தொடர்பாக அவரது The search for new earth என்ற ஆவணப்படம் 2018இல் வெளியிடப்பட்டது.
அப்போது அவர் 2600ஆம் ஆண்டைப் பற்றி கடுமையாக எச்சரித்திருந்தார். மனிதகுலம் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால், பூமி ஒரு பிரமாண்ட நெருப்பு பந்தாக மாறக்கூடும் என்று ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார். புவி வெப்பமயமாதல் மற்றும் கால நிலை மாற்றம்தான் உலகம் அழிவதற்கான முக்கிய காரணிகளாக இருக்கும் என்பது இவரது கருத்தாக உள்ளது.
இதனை மையப்படுத்தி விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அவர்களது ஆய்வு முடிவுகளும் ஸ்டீபன் ஹாக்கின்ஸின் கருத்துக்களும் ஒத்துப்போவதாக இருக்கின்றன. உலகம் அழிவதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்று நாசா கூறியுள்ளது. ஆகையால், பூமியை பாதுகாப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பருவ நிலை மாறுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் பிரச்சனைகளை சமாளித்தால் நம்மால் பூமியை இன்னும் பாதுகாக்க முடியும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.