fbpx

Earthquake..!! ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்..!! பீதியில் தெறித்து ஓடிய பொதுமக்கள்..!!

ஜப்பானின் முக்கிய தீவுகளின் வடக்கே உள்ள ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இன்று மாலை 2.48 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் 50 கி.மீ. ஆழத்தில் தாக்கியுள்ளது என தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக ஜப்பானின் தீபகற்பத்தில் இருந்து பரவியுள்ள எரிமலைத் தீவுகளின் குழுவான இசு தீவுகளில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி செய்த காரியம்..!! இது என்னடா ஜெமினி பேரனுக்கு வந்த சோதனை..!!

Tue Mar 28 , 2023
சென்னை மாம்பலம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் மஞ்சு. இவர், ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஆடைகளை வடிவமைத்து கொடுத்து வருகிறார். அந்த வகையில், பிக்பாஸ் பிரபலம் அபிநயின் மனைவி அபர்ணா வைத்திருக்கும் ஜவுளிக்கடைக்கு, மஞ்சு ஆடைகளை வடிவமைத்து சப்ளை செய்து வந்துள்ளார். பிக்பாஸ் அபிநய், நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் என்பதால், மிகுந்த […]

You May Like