fbpx

அந்தமான் மற்றும் இந்தியாவின் இந்த மாநிலத்தில் நிலநடுக்கம்…!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள அந்தமான் கடற்பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தமான் கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இன்று காலை 3:40 மணியளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என தெரிவிக்கப்டுகிறது. சுனாமி எச்சரிக்கை போன்றவை விடுக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள காம்ஜாங் மாவட்டத்தில் இன்று காலை 10.19மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.5ரிக்டர் அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனவரி 24 அன்று, நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் கூற்றுப்படி, ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் டெல்லி மற்றும் பிற பகுதிகளை உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர் பற்றி தெரியுமா..?

Tue Jan 31 , 2023
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று தாக்கல் செய்யப்பட்டது.. நாட்டின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. இருப்பினும், புதிய வரிகள் எதுவும் முன்மொழியப்படாத இடைக்கால பட்ஜெட்டாக அது இருந்தது… மாலை 5 மணிக்கு சண்முகம் செட்டியார் பட்ஜெட்டை பிரீஃப்கேஸில் தாக்கல் செய்தார். அந்த ஆண்டு மொத்த […]

You May Like