fbpx

EARTHQUAKE : டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம்…! கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்..! 6.2ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்..!

டெல்லி-என்.சி.ஆர், நொய்டா, குர்கான், ஃபரிதாபாத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் சிறிது நேரம் உணரப்பட்டதாக தகவல். இதனால் கட்டிடங்களை விட்டு மக்கள் வெளியே வந்து இருந்தனர்.

மேலும் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால், நிர்மான் பவனில் இருந்து மற்றவர்களுடன் வெளியேறினார்.

நேபாளத்தில் இன்று பிற்பகல் 2.25 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து நேபாளத்தில் பிற்பகல் 2.51மணிக்கு 6.2ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என்று தகவல்.

Kathir

Next Post

நிலநடுக்கம் காரணமாக சாலையில் நின்ற மத்திய அமைச்சர்…! அடுத்தடுத்து நேபாளத்தில் நிலநடுக்கம்..!

Tue Oct 3 , 2023
டெல்லி-என்.சி.ஆர், நொய்டா, குர்கான், ஃபரிதாபாத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் சிறிது நேரம் உணரப்பட்டதாக தகவல். இதனால் கட்டிடங்களை விட்டு மக்கள் வெளியே வந்து இருந்தனர். நேபாளத்தின் இன்றைய தினம் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று பிற்பகல் 2.25 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான […]

You May Like