fbpx

நிலவின் மேற்பரப்பில் நிலநடுக்கம்..!! வீரர்கள் இதை விட்டுச்சென்றது தான் காரணம்..? வெளியான ஷாக்கிங் தகவல்..!!

சமீபத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் நிலவில் பல்வேறு ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியது. இவை இரண்டும் தற்போது ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றுள்ளன. இவை செயல்பாட்டில் இருந்த போது நிலவில் நிலநடுக்கம் ஒன்றையும் பதிவு செய்திருந்தது.

சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் “இயற்கையான சம்பவம்” ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த இரண்டு வாரம் நிலவில் விக்ரம் லேண்டரில் இருக்கும் Lunar Seismic Activity (ILSA) எனப்படும் நிலநடுக்க ஆய்வு கருவி நிலவில் நிலநடுக்கத்தை பதிவு செய்தது. அதாவது இதை ஸீரோ இயற்கையான நிகழ்வு என்று மட்டுமே கூறி உள்ளது. ஆனால், இது என்ன நிகழ்வு.. நிலநடுக்கமா? வேறு எதுவுமா? என்று கூறவில்லை. இதுபற்றி சந்திரயான் 3 ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது என்ன நிகழ்வு என்பது தொடர்பான விவரங்கள் மர்மமாகவே இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் கலிஃபோர்னியா தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வில், அப்பல்லோ 17 நிலவில் விட்டுச்சென்ற மாடூல் காரணமாக நிலவின் மேற்பரப்பில் சிறிய “நிலநடுக்கங்கள்” ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. அப்பல்லோ 17 டிசம்பர் 1972 இல் நாசா மூலம் ஏவப்பட்டது. நாசா விண்வெளி வீரர்களான ஜீன் செர்னான் மற்றும் ஹாரிசன் ஷ்மிட் ஆகியோர் நிலவில் இறங்கி ஆய்வு செய்தனர். அதோடு சில விஷயங்களை விட்டுச் சென்றனர்.

அமெரிக்கக் கொடி, நிலவில் ஆய்வு செய்யும் வாகனம் மற்றும் நிலவில் இருந்து சிக்னலை பூமிக்கு அனுப்பும் ஆய்வு கருவிகளை கொண்ட ஆய்வு மாடூல் ஆகியவற்றை நிலவில் விட்டு வந்தனர். இவை இப்போதும் அங்கு தான் உள்ளன. ஆனால், அது தற்போது செயல்படவில்லை. நில அதிர்வு ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் நான்கு ஜியோ ஃபோன்கள் இதேபோல் விடப்பட்டது. அக்டோபர் 1976 முதல் மே 1977 வரை இந்த நிலநடுக்க ஆய்வு கருவிகள் இங்கே ஆய்வு செய்தன. அப்போது சிறிய அளவில் நிலநடுக்கங்களை இவை பதிவு செய்தது.

இந்த ஆய்வின் மூலம் நிலவில் ஏன் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, தினசரி வெப்பநிலை மாறுபாடுகளின் விளைவாக நிலவில் மேற்பரப்பில் நடுக்கம் ஏற்படுகிறது. அதாவது பூமியைப் போல், சந்திரனின் மேற்பரப்பு சூடு மற்றும் குளிரை தாங்கும் வளிமண்டலத்தை கொண்டிருக்கவில்லை. இதனால் இரவும் பகலும் வெப்பநிலை மாறுபாடுகளால் அதன் அளவு அதிகரிக்கும்.

அதாவது வெப்பத்தின் போது விரிவடையும், குளிரின் போது சுருங்கும். நிலவின் மேற்பரப்பு இப்படி சுருங்கி விரியும். இதனால் அவை நிலநடுக்கமாக உணரப்படும். இதை Thermal Moonquakes என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இவை நிலவில் ஏற்படும் வெப்பத்தின் போது அதிக சூடாகின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள நிலவின் நிலப்பரப்பு மேலும் சூடாகிறது. இதன் காரணமாக அங்கே நிலவும் அதிக அளவில் விரிவடைந்து இரவில் அதிகம் சுருங்குகிறது. இதனால் அந்த குறிப்பிட்ட இடங்களில் மற்ற இடங்களை விட அதிகம் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! ஒரு நாளைக்கு ரூ.600 ஊதியம்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்

Fri Sep 15 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Visiting Medical Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.A.M S / B.H.M.S தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு […]

You May Like