fbpx

உலகை உலுக்கிய நிலநடுக்கம்..!! உருக்குலைந்த துருக்கி நாடு..!! 8,000 பேர் பரிதாப பலி..!!

மத்திய துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 8,000 பேர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 18 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது மத்திய துருக்கியில் 2-வது நாளாக நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 8,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஐரோப்பிய ஒன்றியம் மீட்பு படையினரை அனுப்பியுள்ளது. இந்தியா தரப்பில் இருந்து மருத்துவர் குழு, அத்தியாவசிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்பு படையிலிருந்து 100 வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது.

Chella

Next Post

இந்தியன் வங்கியில் 203 காலியிடங்கள்!

Wed Feb 8 , 2023
இந்தியன் வங்கி  காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை  இன்று வெளியிட்டு இருக்கிறது அதன்படி  203 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக  அதிகாரப்பூர்வ இந்தியன் வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில்  ஸ்பெஷலிஸ்ட் ஆபிஸர் பணிகளுக்கு பல்வேறு  பிரிவுகளின் கீழ் 203 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பை இன்று இந்தியன் வங்கி அதன் இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. தகுதியுடையவர்கள்  இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  பதிவு […]

You May Like