fbpx

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்..!! அடியோடு சாய்ந்த வீடுகள்..!! அலறி ஓடிய மக்கள்..!! ரயில் சேவை முடக்கம்..!!

சீனாவில் நேற்று நள்ளிரவில் 7.2 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில், பொதுமக்களும் சிலர் காயமடைந்துள்ளனர். தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது.

இந்நிலையில் தான், நேற்று நள்ளிரவில் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது. அதாவது சீனாவின் தெற்கு பகுதியில் ஜின்ஜியாங் மாகாணம் உள்ளது. இங்கு தான் நேற்று நள்ளிரவு 11.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் குலுங்கி உள்ளன. இதனால் வீட்டில் தூங்கிய மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர்.

அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் குலுங்கியதோடு, உருண்டு விழுந்ததாக சிலர் தெரிவித்தனர். மேலும், சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 27 ரயில்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக நிறுத்தப்பட்டது.

Chella

Next Post

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு..!!

Tue Jan 23 , 2024
தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திமுக வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் மதிவேந்தன். இவரது தந்தை அருந்ததிய சமூகத்தை சேர்ந்த மருத்துவர் மாயவன். மதிவேந்தன் நாமக்கல் சட்டமன்ற தொகுதியிலும், ராசிபுரம் மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். வைகோ திமுகவில் இருந்து வெளியேறியபோது அவருடன் வெளியேறி மதிமுகவில் இணைந்தார். பின்பு சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுகவுக்கே […]

You May Like