பூமியின் உள் மையமானது சமீபத்தில் சுழல்வதை நிறுத்தி, அதன் எதிர் திசையில் சுழன்று வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன..
பூமியின் தோற்றம், பூமி சுழற்சி ஆகியவை பற்றி பல ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.. பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சலை போல சுழல்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.. இந்நிலையில் பூமியின் உள் மையமானது சுழல்வதை நிறுத்தி, தற்போது எதிர் திசையில் சுழன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. நேச்சர் ஜியோசைன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து பேசிய போது “ பூமியின் உள்மையத்தின் சுழற்சியானது தோராயமாக ஒவ்வொரு 35 வருடங்களுக்கும் ஒருமுறை திசையை மாற்றுகிறது. இது 1970களின் தொடக்கத்தில் திசையை மாற்றிக்கொண்டது.. சமீபத்தில் பூமியின் உள் மையமானது தனது சுழற்சியை நிறுத்தி உள்ளது.. அதாவது 2009ல் பூமி உள் மையத்தின் சுழற்சி நிறுத்தப்பட்டது.. தற்போது அது எதிர் திசையில் சுழன்று வருகிறது.. 2040களின் நடுப்பகுதியில் பூமியின் உள் மைய சுழற்சி மீண்டும் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்..
பூமியின் அடுக்குகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.. அவை மேற்பரப்பு, மேன்டில் மற்றும் கோர் ஆகியவை ஆகும். பூமி முழுவதும் ஏற்படும் பூகம்பங்களிலிருந்து நில அதிர்வு அலைகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். பூமியின் உள் மையமானது 7000 கிலோமீட்டர் அகலமும், திட இரும்பால் சுற்றப்பட்டு, உள் பகுதி திரவ இரும்பால் நிறைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

1996 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பூமியின் உள் மையத்தில் பயணிக்கும் நில அதிர்வு அலைகளின் பயண நேரம் கடந்த 30 ஆண்டுகளாக சிறிய மற்றும் முறையான மாறுபாட்டைக் காட்டுகிறது. இந்த மாறுபாடு உள் மையத்தின் சுழற்சியால் சிறப்பாக விளக்கப்படுகிறது.. சுழற்சி வீதம் மேன்டில் மற்றும் மேலோட்டத்தின் தினசரி சுழற்சியை விட வருடத்திற்கு 1° வேகத்தில் உள்ளது.
பீக்கிங் பல்கலைக்கழகத்தின் குழு 1995 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட நிலநடுக்கங்களை ஆய்வு செய்தது.. 2009 ஆம் ஆண்டில் மையமானது சுழல்வதை நிறுத்தியது என்றும், அது தற்போது சுழலும் திசையை மாற்றும் செயல்பாட்டில் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் பூமியின் உள் மையத்தின் சுழற்சி, ஒரு நாளின் நீளத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையது என்றும், பூமி அதன் அச்சில் சுழலுவதற்கு எடுக்கும் சரியான நேரத்தில் சிறிய மாறுபாடுகளுக்கு வழிவகுக்கும் என்றும், பல்வேறு அடுக்குகளுக்கு இடையே இணைப்புகள் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். எனினும் இது கிரகத்தின் மேற்பரப்பில் வாழும் மக்களை பாதிக்கும் என்று கூறுவதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்..