fbpx

கிறிஸ்துமஸ் வரப்போகுது.. கேக் செய்யலன்னா எப்படி..? ஓவன் வேண்டாம்.. இதோ ஈசி ரெசிபி..

 டிசம்பர் மாதம் வந்து விட்டாலே, பலருக்கும் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் மாதமும், இந்த வருடம் முடியப்போகிறது என்பதும்தான். இந்தியாவில், குறிப்பிட்ட சிலர் மட்டுமே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் வெளிநாடுகளில் இந்த பண்டிகை, புது வருடத்துடன் சேர்த்து விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால், எந்த நாட்டில் கொண்டாடப்பட்டாலும் கிறிஸ்மஸில் தவிர்க்கப்பட முடியாத ஒரு பொருளாக இருக்கிறது கேக். சுவையான கிறிஸ்துமஸ் கேக் வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இந்த கேக் செய்வதற்கு மைதா மாவு 300 கிராம், பேக்கிங் பவுடர் 3 டீஸ்பூன், சோடா உப்பு 1/2 டீஸ்பூன், வெண்ணெய் 200 கிராம், பொடித்த சர்க்கரை 250 கிராம், முந்திரிப் பருப்பு 50 கிராம், உலர் திராட்சை 50 கிராம், 3 முட்டை, செர்ரி 50 கிராம், பிஸ்தா பருப்பு 50 கிராம், கொக்கோ 1 டீஸ்பூன், கேக் பவுடர் 1 டீஸ்பூன், வெண்ணிலா எசன்ஸ் தேவையான அளவு மற்றும் பால் 100 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் மைதா மாவு, கேக் பவுடர், சோடா உப்பு ஆகியவற்றை மூன்று முறை சல்லடையில் வைத்து சலிக்கவும். முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இவற்றுடன் கரைத்த முட்டையை நன்றாக நுரை வரும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் மைதா மாவோடு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலக்கவும். இவற்றுடன் வெண்ணிலா எசன்ஸ், கொக்கோ பவுடர், செர்ரி மற்றும் முந்திரி பிஸ்தா ஆகியவற்றையும் கலக்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்த பின்னர் கேக் ட்ரேயில் இவற்றை பரப்பி ஓவனில் வைத்து எடுக்கலாம். ஓவனில்லை என்றால் குக்கரில் உப்பு அல்லது மண்ணை பரப்பி அதன் மேல் சற்று உயரமாக வைக்க ஒரு ஸ்டாண்ட் கலந்து வைத்த கலவையை டிபன் பாக்ஸில் மூடி வைத்து 45 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான கிறிஸ்துமஸ் கேக் ரெடி. உங்களுக்கு பிடித்த வகையில் அலங்காரம் செய்து கேக் பரிமாறலாம்.

Read more ; கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிட்டால் கரு சிதைவு ஏற்படுமா..? – மருத்துவர் விளக்கம்

English Summary

Easy cake can be made without oven.. Do you know how..? Here is the Christmas cake recipe..

Next Post

அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்...!

Sun Dec 22 , 2024
DMK resolution against Union Minister Amit Shah for insulting Ambedkar

You May Like