மத்திய அரசு மக்களுக்கு தங்களுடைய பான் மற்றும் ஆதார் எண் இணைக்க பல முறை கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், இன்றே கடைசி நாள். இதுவரையில் மத்திய அரசு காலநீட்டிப்புக்கான அறிவிப்புகள் வெளியாகவில்லை, எனவை இன்றைய நாள் முடிவிற்குள் பான் ஆதார் இணைத்திடுங்கள். பான் எண்ணை ஆதார் எண் உடன் இணைக்காதவர்கள் இன்றே இப்பணியை முடிக்க வேண்டியது கட்டாயம். ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவித்துள்ளது.
வரி செலுத்துவோருக்கு கூடுதல் அவகாசம் அளிக்கும் வகையில் பல முறை இக்காலக்கட்டத்தை நீட்டிக்கப்பட்டு உள்ளது மறக்க முடியாது. எளிதாக வீட்டில் இருந்துக்கொண்டே இணையம் வாயிலாக சில நிமிடத்தில் பான் எண் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலைத் திறக்கவும் – https://incometaxindiaefiling.gov.in/. இத்தளத்தில் நீங்கள் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்யவில்லை என்றால், உடனே ரிஜிஸ்டர் செய்யுங்கள். ஒருவேளை செய்திருந்தால் உங்கள் PAN எண் தான் யூசர் ஐடியாக இருக்கும். யூசர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு உள்நுழையவும். ஒரு பாப் அப் விண்டோ தோன்றும், உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும்படி கேட்கும். இல்லையெனில், மெனு பாரில் உள்ள ‘Profile Settings’ என்பதற்குச் சென்று, ‘Link Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும்.
PAN விவரங்களின்படி பெயர் பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பான் விவரங்களை திரையில் சரிபார்க்கவும். இதில் பொருத்தமின்மை இருந்தால், ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சரி செய்ய வேண்டும். விவரங்கள் பொருந்தினால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, “link now” பட்டனைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் உங்கள் பான் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு பாப்-அப் செய்தி உங்களுக்குத் தெரிவிக்கும். படி உங்கள் PAN மற்றும் ஆதாரை இணைக்க நீங்கள் https://www.utiitsl.com/ அல்லது https://www.egov-nsdl.co.in/ ஐப் பார்வையிடலாம். அரசின் அறிவிப்பின் படி இன்றைக்குள் ஆதார் பான் இணைப்பு செய்யப்படாவிட்டால், ஜூன் 30க்கு பிறகு 1000 ரூபாய் வரையில் கட்டணத்துடன் ஆதார் பான் இணைக்க வேண்டும். ஜூன் 30, 2023 குள் இணைக்கப்படாத பான் கார்டு அனைத்தும் ஜூலை 1 ஆம் தேதி முதல் செயல்படாது என்று நிதி அமைச்சகம் மத்திய நேரடி வரி வாரியத்தின் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.