தற்போது உள்ள காலகட்டத்தில், டைல்ஸ் இல்லாத வீடுகளே இல்லை. குறிப்பாக, வீடு முழுவதும் இல்லை என்றாலும் கழிவறையில் மட்டுமாவது டைல்ஸ் வைத்து விடுகிறார்கள். அந்த வகையில், கழிவறையில் இருக்கும் டைல்ஸ்க்கு அதிக பராமரிப்பு தேவை. நாம் நமது வீடுகளில் அதிக தண்ணீர் பயன்படுத்தும் இடம் என்றால் அது கழிவறை தான், இதனால் நாம் மற்ற அறைகளை விட கழிவறைக்கு சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு வேலை நாம் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்வது இல்லை என்றால், டைல்ஸில் வழுவழுப்பு தன்மை ஏற்பட்டு விடும். இதனால் சற்று கவனம் இல்லாமல் கழிவறைக்கு செல்லும் போது வழுக்கி விழும் அபாயம் அதிகம். அதே சமயம், இதை சரியாக பராமரிக்கவில்லை என்றால், அதில் உப்பு கரை படித்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். இதனால் வாரம் ஒரு முறை ஆவது கழிவறையை சுத்தம் செய்தே ஆக வேண்டும்.
இன்றைய காலக்கட்டததில், பல லிக்யூடு கழிவறையை சுத்தம் செய்ய வந்து விட்டது. ஆனால் அதில் கெமிக்கல் அதிகம். அதே சமயம் விலையும் சற்று அதிகம். இதனால் நீங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே பழைய கழிவறையை எப்படி புதுசு போல் மாற்றுவது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் எந்த பெரிய செலவையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு முதலில், ஒரு பவுலில், 3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில், 4 ஸ்பூன் சபீனா பவுடர், 4 ஸ்பூன் துணி துவைக்க பயன்படுத்தப்படும் டிஜர்ஜெணட் பவுடர், பின்னர் ரசம் மற்றும் சாம்பார் வைக்க பயன்படுத்திய புளியின் சக்கையை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை இதில் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையை, கழிவறையில், உப்புக்கரை இருக்கும் இடத்தில் தெளித்து நன்கு ப்ரஷ் செய்தால் போதும். கழிவறை டைல்ஸ் மிகவும் சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாறும்.