மற்றவர்கள் முன் நாம் அழகாக தெரிய வேண்டும் என்பது தான் பலருக்கு இருக்கும் ஒரே ஆசை. இதற்காக தான் பல ஆயிரங்களை செலவு செய்து புது ஆடைகள், ஆபரணங்கள் போன்றவற்றை வாங்குகிறோம். நாம் என்ன தான் மேக்கப் செய்து, விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தாலும், நமது பல் மஞ்சள் நிறத்தில் இருந்தால் மொத்த அழகும் கெட்டு விடும். நமது பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும் போது, நம்மால் வாய் விட்டு மற்றவர்கள் முன் சிரிக்க கூட முடியாது.
ஆம், நமது மொத்த அழகையும் கெடுக்கும் வகையில், நமது பற்களில் இருக்கும் மஞ்சள் கரை பளிச்சென்று அடுத்தவர் முன்பு தெரியும். இப்படி பற்கள் மஞ்சள் நிறமாக மாற நிறைய காரணங்கள் உண்டு. குறிப்பாக, மது அருந்துவது, காபி டீ அதிகம் குடிப்பது, சர்க்கரை நோய், புகைப்பிடிப்பது போன்ற பல காரணங்கள் உள்ளது. இப்படி மஞ்சள் நிற பற்களை மாற்ற சந்தைகளில் பல பேஸ்ட் விற்கப்படுகிறது.
விலை உயர்ந்த அந்த பேஸ்ட் வாங்கி பயன்படுத்துவதால் நிரந்தர தீர்வு கிடைக்குமா என்றால், கட்டாயம் இல்லை. நிரந்தர தீர்வு அளிக்காத ஒரு பொருளை, அதுவும் அளவிற்கு அதிகமான ரசாயனங்கள் உள்ள ஒரு பொருளை வாங்கி பயன்படுத்துவது நல்லது அல்ல. அந்த வகையில், மஞ்சள் நிற பற்களை எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் இல்லாமல், வீட்டிலேயே எப்படி வெள்ளை நிறமாக மாற்றுவது என்பதை பற்றி கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..
அந்த வகையில், தேங்காய் எண்ணெய் கொண்டு பற்களை வெள்ளையாக மாற்ற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். தேங்காய் எண்ணெயுடன் சிறிது சமையல் சோடாவை கலந்து பற்களை விளக்கிப் பாருங்கள்.. இரண்டு நிமிடத்தில் உங்களின் மஞ்சள் பற்கள் வெள்ளையாக மாற்ற முடியும்.
இதற்கு முதலில், தேங்காய் எண்ணெயையும் சமையல் சோடாவையும் சம அளவாக எடுத்து நன்றாக கலந்து பற்பசைகளுக்கு பதிலாக இதை பயன்படுத்தி தேய்க்க வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் பற்கள் வெள்ளை நிறத்தில் மாறுவதை நீங்களே கண்கூட பார்க்கலாம்.