நமது முன்னோர், அடிக்கடி வெற்றிலை பாக்கு போடுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெற்றிலை பாக்கு போடுவது அநாகரீக செயலாக பார்க்கப்படுகிறது. இதற்க்கு காரணம், வெற்றிலை பாக்கில் உள்ள நன்மைகள் பற்றி நமக்கு தெரிவதில்லை. பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு வைத்து சாப்பிடும்போது அது நல்ல சுவை தரும். அதே சமயம், அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. ஆம், வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால், இதயம் வலுவடைகிறது. சமீபத்தில் நடத்தப்பட ஆய்வின் படி, தினமும் இரவில், தூங்கும் முன் வெற்றிலையை மென்று சாப்பிடுவதால், நீரிழிவு அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வெற்றிலை, உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இதனால் வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் நீங்கும். வெற்றிலையில் உள்ள பீனாலிக் கலவைகள் உடலில் இருந்து கேடகோலமைன்கள் எனப்படும் கரிம சேர்மங்களை வெளியிடுவதால், வெற்றிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்களை தவிர்க்கலாம்.
வெற்றிலையை அரைத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராது. வெற்றிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இது உடலில் உள்ள pH அளவை இயல்பாக வைத்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வராது.