fbpx

இந்த பழத்தை தொடர்ந்து 3 நாட்கள் மட்டும் சாப்பிடுங்கள்..!! தீராத பிரச்சனையும் தீர்ந்துவிடும்..!!

பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்ப அருந்துவார்கள். எல்லா வகைப் பழங்களுமே உடலுக்கு உகந்தவைதான் என்றாலும் மாதுளம் பழத்திற்கு என்று எப்போதுமே தனி மவுசு உண்டு. சமீப காலமாக மாம்பழ ஜூஸ், திராட்சைப் பழ ஜூஸ் போன்ற மற்ற பழங்களின் ஜூஸ்களைக் காட்டிலும் மாதுளம் பழச் சாற்றில் அதிகளவிலான பலன்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது. கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் மாதுளம் பழத்தின் அளவிடற்கரிய சத்துகளையும், மருத்துவ பலன்களையும் சொல்லி மாளாது. தற்போது ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், விருந்து விழா நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் மாதுளம் பழ ஜூஸ்-க்கு தனியிடம் கிடைத்துள்ளது. உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்’ என அழைக்கிறார்கள்.

முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது. அன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும். பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும்.

சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து 3 நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

Chella

Next Post

செய்தி நேரலையின்போது ஏவுகணை தாக்குதல்!... உச்சமடைந்த இஸ்ரேல் பாலஸ்தீன போர்!... அதிர்ச்சி வீடியோ!

Mon Oct 9 , 2023
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சமடைந்து வரும் நிலையில், தொலைக்காட்சி ஒன்றில் செய்தி நேரலையின்போது காஸா நகரின் மையப்பகுதியில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதல், குறித்த வீடியோ வெளியாக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர்,  இஸ்ரேலின் டெல் அவி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஐந்தாயிரம் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, போர் பிரகடனத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். தொடர்ந்து, காசா […]

You May Like