பொதுவாக ஸ்நாக்ஸ் என்றாலே பலருக்கு முதலில் நியாபகம் வருவது உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். இதை பசிக்காக சாப்பிடுபவர்கள் ஒரு சிலர் இருந்தாலும், சைடிஷ் ஆகவும், பசியே இல்லை என்றாலும் பொழுது போக்குவதர்க்காகவும் பலர் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுகின்றனர். நாம் வீடுகளில் தயாரிக்கும் சிப்ஸில் அதிக அளவு உப்பு இருக்காது. ஆனால், கடைகளில் கிடைக்கும் சிப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளான சோயா சாஸ், இறைச்சி ஆகியவற்றால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக இந்தியாவில், அதும் தென்னிந்தியாவில் வயிற்றுப் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக மாறியுள்ளது. இது ஆசியாவில் ஆண்களிடையே இரண்டாவது பொதுவான புற்றுநோயாகவும், பெண்களிடையே மூன்றாவது பொதுவான புற்றுநோயாகவும் மாறியுள்ளது. ஆனால் பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. உணவில் உள்ள அதிகப்படியான உப்பு வயிற்றின் மென் படலங்களை சேதப்படுத்துகிறது. இதனால் ஹெலிகோபாக்டர் பைலோரி போன்ற தொற்றுநோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள உப்பு புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் முடிந்த வரை, உப்பு உட்கொள்வதைக் குறைத்து, பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை சாப்பிடுவது புற்றுநோயின் ஆபத்தைக் குறைக்க உதவும். இது போன்ற உணவு வகைகளுடன் சேர்ந்து, ஊறுகாய்கள் மற்றும் புளித்த காய்கறிகள் உப்புநீரில் பாதுகாக்கப்படுவதால் அவற்றில் சோடியம் அதிகமாக இருக்கும்.
மேலும், இன்ஸ்டண்ட் நூடுல்ஸ், சூப்கள் மற்றும் உண்ணத் தயாராக இருக்கும் உணவுகள் பெரும்பாலும் நீண்ட கால பாதுகாப்பிற்காக உப்புச் சேர்க்கப்படுவதால் வயிற்று புற்றுநோயின் அபாயத்தை 1.5 முதல் 2 மடங்கு அதிகரிக்கும் என்று பைலால் அமீன் பொது மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இதனால் உப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைக்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்..
Read more: “மிளகாய் பொடி தூவி, கொதிக்கும் எண்ணெய் ஊற்றி…” குழந்தைகளை பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்..