fbpx

ஆண்களே உஷார்!!! ஊறுகாய் சாப்பிடுவதால் வரும் ஆபத்து…

உப்பு இல்லாமல் கூட சாப்பிட்டு விடலாம் ஆனால் ஊறுகாய் இல்லாமல் சாப்பிட முடியாது என்று கூறும் ஊறுகாய் பிரியர்கள் அநேகர். சாதத்திற்கு மட்டும் இல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் ஊறுகாய் வைத்து சாப்பிடுபவர்கள் பலர் உண்டு. நீங்களும் இப்படிப்பட்ட ஊறுகாய் பிரியரா? அப்போ கண்டிப்பா இதை படியுங்க..

பொதுவாக ஊறுகாய் அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது கிடையாது என்று பலர் கூறுவது உண்டு. அது உண்மையா? ஏன் அப்படி கூறுகிறார்கள் தெரியுமா? ஊறுகாய் தாயாரிக்க அதிகளவு எண்ணெய், மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதனால், கொலஸ்ட்ரால் மற்றும் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக ஆண்கள் ஊறுகாயை அதிகமாக உட்கொள்வதால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இரைப்பை புற்றுநோய் அபாயம்: ஊறுகாயை அதிகமாக உட்கொள்வது இரைப்பை புற்றுநோய் அபாயத்திற்கு வழிவகுக்கும். ஊறுகாய்கள் நமது உடலில் இரைப்பை புற்றுநோயின் அபாயத்தை பல மடங்கு அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனுடன், அதிக அளவு உப்பு காரணமாக, இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஆம், மாங்காய் ஊறுகாயில் உள்ள ஆபத்தான மூலப்பொருள் அஸ்டமிபிரிட். அஸ்டமிபிரிட், மாம்பழங்களைப் பாதுகாக்கப் பயன்படும் ஒரு கரிம கலவை ஆகும். இதனை சேர்ப்பதால் மாங்காய் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுப் போகாது. மாங்காய் ஊறுகாயில் காணப்படும் இது மாதிரியான பொருட்கள் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், ஆண்கள் மாங்காய் ஊறுகாய் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.

Maha

Next Post

சப்பாத்தி சாஃப்ட்டாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த ஒரு பொருளை மட்டும் மாவில் கலந்து பாருங்கள்..

Fri Sep 22 , 2023
மிருதுவாக சப்பாத்தி செய்வது சிறிது கடினமான விஷயம் தான். எப்படியாவது சப்பாத்தி மிருதுவாக வந்து விடாதா என்று நினைப்பவர்கள் அநேகர் உண்டு. அதிலும் லேயர் லேயராக சப்பாத்தி செய்ய வேண்டும் என்பது பல இல்லத்தரசிகளுக்கு பெரிய ஆசை. ஆனால் லேயர் லேயராக சப்பாத்தி எப்படி செய்ய வேண்டும் என்று தெரிவதில்லை. அப்படி நீங்களும் லேயர் லேயராக, மிருதுவாக சப்பாத்தி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?? அப்போ கண்டிப்பாக தொடர்ந்து படியுங்கள்.. […]

You May Like