fbpx

பொருளாதார நெருக்கடி!… பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் முக்கிய நிறுவனங்கள்! அதிரடி அறிவிப்பும்!… அதிர்ச்சியும்!…

பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு முக்கிய நிறுவனங்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது என்பதும் பெட்ரோல், டீசல், கோதுமை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர். அங்கு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசால் முடியாததால், பல்வேறு முறைகளில் சீனா மற்றும் ஐஎம்எப் ஆகியவை பாகிஸ்தானுக்கு உதவி செய்துவருகிறது.இந்த நிலையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹோண்டா நிறுவனம் திடீரென தனது ஆலையை தற்காலிகமாக மூட இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்டா நிறுவனம் கார் அசெம்பளி ஆலையை நடத்தி வருகிறது .பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாகவும் இதனை அடுத்து இன்று முதல் அதாவது மார்ச் 9 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக பாகிஸ்தானில் உள்ள ஹோண்டா அட்லஸ் கார் நிறுவனம் மூடப்படும் என்று அந்நாட்டின் தொழில்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளது.மேலும் பாகிஸ்தானின் பொருளாதார நிலைமை இதே போன்று நீடித்தால் நிரந்தரமாக மூடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுசுகி மோட்டார் கம்பெனி மற்றும் டொயோட்டாவின் மோட்டார் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஆலையை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது ஹோண்டா நிறுவனமும் மூடி உள்ளதை அடுத்து உற்பத்தி குறைவு மட்டும் இன்றி அந்நாட்டின் வேலை வாய்ப்பின்மையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Kokila

Next Post

மாணவர்களே கவனம்...! இன்று முதல் ஆன்லைன் மூலம் ஹால்டிக்கெட்...! வெளியான புதிய அறிவிப்பு...!

Sat Mar 11 , 2023
முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA தேர்வு மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எம் .இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை […]
செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000..? சிறப்பு விருந்தினர் இவர்தான்..! வெளியான முக்கிய தகவல்

You May Like