கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் முகமது ஹபீஸ் மற்றும் அவருக்கு தொடர்புடைய ரூ.4.4 கோடி மதிப்புள்ள வங்கி இருப்புக்கள் மற்றும் நிலையான வைப்பு தொகையை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கடந்த வாரம் கேரளா, கர்நாடகா மற்றும் கோவாவில் 9 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1672.8 கிராம் எடையுள்ள தங்க நகைகள், ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள இந்திய கரன்சிகள், ஏழு மொபைல் போன்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியது. பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் விதிகளின் கீழ் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது.