fbpx

Raid: 2-வது நாளாக ஆதவ் அர்ஜுன் வீட்டில் ED அதிகாரிகள் சோதனை…! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்…!

ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் வசிக்கும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுன் வீடு, அவரது அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் சோதனையை மேற்கொண்டனர். ஆதவ் அர்ஜுன், கடந்த ஜனவரி மாதம்தான் விசிக-வில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

வி.சி.க. துணைபொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர். வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று காலை முதல் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனையானது நடைபெற்று வருகிறது. இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பொது விநியோகத் திட்ட ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றது. கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் வழங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் தரமற்று இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கரூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வ ராஜ் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் உள்பட 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஏற்கெனவே சோதனை மேற்கொண்டிருந்தனர். இதில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

OPS: கடமையை செய்ய தவறிய திமுக அரசு...! முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் அறிக்கை...!

Sun Mar 10 , 2024
தி.மு.க. அரசு தன் கடமையை செய்யாமல், குறை கூறிய ஆசிரியரின் குரல்வளையை நெருக்கியிருக்கிறது என ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். இது‌ குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில்; ஒரு நாட்டின் எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதிலும், கிராமப்புறங்களில் மக்களிடையே நிலவும் அறியாமையை நீக்குவதிலும், சமூக, பொருளாதார மற்றும் சுகாதார நிலைகளை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கினை வகிப்பவர்கள் ஆசிரியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட ஆசிரியர்களின் கருத்துச் சுதந்திரத்தை […]

You May Like