விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10 இடங்களில் இந்த திடீர் சோதனையானது நடைபெற்று வருகிறது. விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
யார் இந்த ஆதவ் ஆர்ஜுன்
சமீபகாலத்தில் நடந்த விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம், திருச்சி சிறுகனூரில் நடந்த வெல்லும் சனநாயகம் மாநாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்தது ஆதவ் அர்ஜுனின் Voice of Common என்ற அமைப்பு தான். இதை குறிப்பிட்டு மாநாட்டிலேயே வெகுவாக பாராட்டியிருந்தார் விசிக தலைவர் திருமாவளவன். இந்த நிலையில் தான் சமீபத்தில் விசிகவில் இணைந்த, ஆதவ் ஆர்ஜுனுக்கு, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.