டெல்லியில் 30 இடங்களில் அமலாக்கத்துறையினர் மதுபான கொள்ளை முறைகேடு தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
டெல்லியில் அரசின் புதிய மதுபான கொள்கையால் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலால் கொள்கை மோசடி வழக்கு பற்றி அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வருகின்றது. இந்த வரிசையில் டெல்லியிலும் இன்று 30 இடங்களில் ஒரே நாளில் சோதனை நடத்தியது.
ஏற்கனவே மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்தி உள்ள நிலையில் அவரது அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தவில்லை. பெங்களூரு, ஐதராபாத் , மகாராஷ்டிராவிலும் சோதனை செய்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மதுபான ஊழல் குறித்து மத்திய புலனாய்வு பிரிவு வழக்குப் பதிவு செய்துளாளர்கள். அதில் மணிஷ் சிசோடியாவை முக்கிய குற்றவாளியாக பதிவு செய்துள்ளனர். வியாபாரிகளுக்கு ரூ.30 கோடி விலக்கு அளித்துள்ளதாக மணீஷ் சிசோடியா மீது இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிந்துள்ளனர். கலால்விதிகளை மீறி கொள்கை விதிகளை புதிதாக வகுத்துள்ளதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டுகின்றது.

இந்நிலையில் மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கம் கொடுத்து அவரை கட்சித் தாவ வைக்கவே இது போன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக அக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
அன்னாஹசாரே திடீர் கடிதம்
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட சமூக ஆர்வலரான அன்னாஹசாரா தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். முன்பு போல செயல்படுவதில்லை. இந்நிலையில் அவர் திடீரென கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ’’ நீங்கள் முதல்வராக பதவி ஏற்ற பின்னர் உங்களுக்கு முதல் முறையாக கடிதம் எழுதுகின்றேன். உங்கள் அரசாங்கத்தின் மதுபான கொள்கை பற்றிய செய்திகளால் நான் வருத்தப்படுகின்றேன். நீங்கள் ஒரு புத்தகத்தில் மது கொள்கை பற்றி எழுதி இருந்தீர்கள். நான் அதற்கு முன்னுரை எழுதிக் கொடுத்தேன். அதில் , மக்களின் சம்மதம் இன்றி மது கடைகளை திறக்கக் கூடாது என கூறியிருந்தீர்கள். முதல்வரான பின்னர் நீங்கள் அதை மறந்துவிட்டீர்கள். ஆம் ஆத்மி கட்சி வேறு எந்த கட்சியில் இருந்தும் வித்தியாசமாக இல்லை நீங்கள் முதல்வரான பின்னர் , லோக் ஆயுக்தாவை முழுவதும் மறந்து விட்டீர்கள் ’’ என குறிப்பிட்டுள்ளார்.