fbpx

“ஸ்டாலின் குடும்பத்திற்கும் ஜாபர் சாதிக்கிற்கும் உள்ள தொடர்பு என்ன..” நீதி விசாரணைக்கு EPS கோரிக்கை.!

தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக குற்ற சம்பவங்களும் அதிகரித்திருக்கும் நிலையில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்திருக்கிறார்.

வெளிநாடுகளுக்கு போதை மருந்துகள் கடத்திய விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மூளையாக செயல்பட்ட திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கும் திமுக குடும்பத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருந்தார்.

தொடர்ந்து அதிகரித்து வரும்போது புழக்கத்திற்கு எதிராக வருகின்ற 12ஆம் தேதி அதிமுக சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார் . இந்நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த கோரியும் ஸ்டாலின் குடும்பத்திற்கும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் ஜாபர் சாதிக் இருக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநரை சந்தித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த சந்திப்பின்போது ஜாபர் சாதிக் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் இடையே உள்ள தொடர்பு பற்றி சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் போதை புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Post

Resignation: திடீர் ராஜினாமா செய்த இந்திய தேர்தல் ஆணையர்!… நெருங்கும் தேர்தலுக்கு மத்தியில் வெடித்த சர்ச்சை!

Sun Mar 10 , 2024
Resignation: 2024 மக்களவைத் தேர்தலுக்கான உச்சகட்ட ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் […]

You May Like