fbpx

நீதிமன்றத்தில் ஆஜரானார் எடப்பாடி பழனிசாமி..!! என்ன காரணம் தெரியுமா..? பரபரப்பு..!!

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது தன்னை பற்றி அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆஜரானார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் முதற்கட்டத்திலேயே கடந்த மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. முன்னதாக, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிடும் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய கோடீஸ்வரர்களில் ஒருவரான தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற மேம்பாட்டு உறுப்பினர் நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை” என குற்றம் சாட்டினார்.

ஆனால், தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இதுவரை 95 சதவீதத்துக்கு மேல் பயன்படுத்தியுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டே தன் மீது அவதூறு பரப்பும் வகையில் பொய் பிரசாரம் செய்ததாகவும் குற்றம் சாட்டிய தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அவர் மன்னிப்பு கேட்கவில்லை. இதையடுத்து, மத்திய சென்னை திமுக எம்பியான தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Read More : தீவிரமடைந்த கோடை மழை..!! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Chella

Next Post

Q4 Results: இன்று காலாண்டு முடிவை வெளியிடும் 97 நிறுவனங்கள்..!

Tue May 14 , 2024
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று 97 நிறுவனங்கள் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன.  வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று 97 நிறுவனங்கள் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன. அதாவது மே 14ம் தேதியான இன்று பார்தி ஏர்டெல், சீமென்ஸ், கோல்கேட்-பாமோலிவ் (இந்தியா), BASF இந்தியா, அப்பல்லோ டயர்ஸ் மற்றும் பிவிஆர் ஐநாக்ஸ் உள்ளிட்ட 97 நிறுவனங்கள் தங்களின் மார்ச் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன. […]

You May Like