எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை வரிசையில் நிற்கும் அனைவரும் வாக்களிக்கலாம். மாலை 6 மணி வரை அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு வரிசையில் நின்று அவர் தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Read More : வாக்காளர்களே செம குட் நியூஸ்..!! இன்று அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்..!!