fbpx

Edappadi Palaniswami | அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது..!! இதுதான் எங்கள் முழக்கம்..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணியை அறிவிப்போம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. திமுக தலைமையில் ஏற்கனவே உள்ள கூட்டணி இந்த தேர்தலிலும் களம் இறங்குகிறது. இதில் இந்திய ஜனநாயகக் கட்சி மட்டும் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக தெரிகிறது.

அதிமுகவை பொறுத்தவரை பொறுமையாகவே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை பணிகளைக் கையாண்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி, எஸ்.டி.பி.ஐ போன்ற சிறிய கட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளன. பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். கூட்டணி தொடர்பாக சிலர் வேண்டுமென்றே விஷம கருத்துகளை பரப்பி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் விரைவில் வரும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கூட்டணி குறித்து அறிவிப்போம்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வென்று தமிழகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிப்பார்கள். மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் பிரச்சாரம் இன்று முதல் தொடங்கிவிட்டது. தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம் என்பது அதிமுகவின் தேர்தல் முழக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

English Summary : Election campaign of AIADMK has started

Read More : Kuvathur | மேலும் சில நடிகைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தேனா..? யூடியூப் சேனல்கள் மீது நடிகர் கருணாஸ் புகார்..!!

Chella

Next Post

தீராத நோயை தீர்க்கும் அற்புத திருக்கோயில்.! இந்த பரிகாரம் செய்து பாருங்கள்.!

Sat Feb 24 , 2024
Vaidyanathar temple: பொதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலுக்கும், ஒரு தனி சிறப்பும், வரலாறும் பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மடவார் வளாகத்தில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. மிகப்பெரும் சைவத்தலமான இக்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரும் சிவ தலமாக இக்கோயில் கருதப்பட்டு வருகிறது. சிவனின் திருவிளையாடல்களில் 24 வகையான திருவிளையாடல்கள் இக்கோயிலில் நடத்தப்பட்டுள்ளது […]

You May Like