எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்..
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில் “ செமி கண்டக்டர் என்ற இயந்திர சாதன உற்பத்தி ஆலையை தொடங்க வேதாந்தா – பாக்ஸ்கான் கூட்டு நிறுவனம் முடிவு செய்து, இதற்காக பல மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.. ஆனால் தமிழக அரசு விதித்த நிபந்தனைகளால் அந்நிறுவனம் மகாராஷ்டிராவுக்கு சென்றுவிட்டது.. இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு கை நழுவிப் போனது..” என்று குறிப்பிட்டிருந்தார்..
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அவர் “ வேதாந்தா, ஃபாக்ஸ்கான் முதலீடுகள் மகாராஷ்டிராவிற்கு சென்றுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி அறியாமையில் கூறுகிறார்.. தமிழகத்தில் செமி கண்டக்டர் திட்டங்களை தனியாக செயல்படுத்தி பாக்ஸ்கான் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக பாக்ஸ்கான் நிறுவனத்துடன் தமிழக அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது..
முன்பு போல் இல்லாமல், மாநிலம் முழுவதும் பரவலாகவும், சீராகவும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. எனவே எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் முதலீடுகள் குறித்து பொய் பரப்புரை வேண்டாம்.. அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார்.. பொய் பரப்புரை மூலம் தமிழகத்திற்கான முதலீடுகளையும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் கெடுக்க வேண்டாம்.. தமிழகத்திற்கு வரும் முதலீடுகள், இளைஞர்களுக்கு உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளை கெடுக்க வேண்டாம்..” என்று குறிப்பிட்டுள்ளார்..