உலக அளவில் ட்ரெண்டாகிவரும் ஜிப்லியில் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்துள்ளார்.
பல அனிமேஷன் தொடர்களுக்கு புகழ்போன நாடு ஜப்பான். இன்றைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் நருடோ வகை அனிமேஷன்கள் போல புகழ்பெற்ற ஒரு அனிமேஷ் ஸ்டைல் தான் ஜிப்லி. ஜப்பானிய இயக்குநர் ஹாயாவோ மியாஸாகி இந்த அனிமேஷன் ஸ்டைலை பயண்படுத்தி பல புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சிகளையும் கைப்பட வரைந்து பின் இந்த இமேஜ்கள் காட்சிகளாக உயிர்கொடுக்கப்படுகின்றன.
4o image generator என்ற புதிய அப்டேட் சேட் ஜிபிடியில் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பு கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே இருந்த இந்த வசதியை தற்போது அனைவரும் இலவசமாக பயண்படுத்திக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு மூன்று ஜிப்லி ஸ்டைலில் அனிமேஷன் இமேஜை ஒருவர் உருவாக்கிக் கொள்ளலாம். எக்ஸ் தளம், இன்ஸ்ட்டாகிராம் பக்கங்களை திறந்தால், அனைவருமே தங்கள் கிப்லி புகைப்படங்களை பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
பிரபலங்களும் தங்கள் புகைப்படங்களை அனிமேஷன் கதாபாத்திரங்கள் போல மாற்றி பகிர்ந்து வரும் நிலையில், முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் இதில் இணைந்துள்ளன. அவரது முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் ஜிப்லி ஸ்டைலில் மாற்றப்பட்டுள்ளன. தனது மறக்கமுடியாத சில தருணங்களை ஜிப்லி பாணியில் உருவாக்கியதாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.